உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 8 குடிசைகள் தீக்கிரை

8 குடிசைகள் தீக்கிரை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த போந்துாரில் வடமாநில தொழிலாளர்கள் 15 பேர், 8 குடிசைகளில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல், நேற்று காலையில் அனைவரும் வேலைக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று பகல் 11:00 மணிக்கு குடிசையில் தீப்பிடித்தது. ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடிசைகள் தீக்கிரையாயின. இதில், உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ