| ADDED : ஜன 09, 2024 09:35 PM
சென்னை:வன்கொடுமை வழக்கில் எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர், சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய போது, கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் மோகன் முத்து, 25. வன்கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக, பரமக்குடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, இவரை தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்த இவர், வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். பின், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தில் சென்னை திரும்பினார். அவரின் பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், தேடப்படும் குற்றவாளி என்பதை உறுதி செய்தனர். பரமக்குடி போலீசாரை வரவைத்து, அவர்களிடம் மோகன் முத்துவை குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.