உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடும் ரயிலில் செயின் பறித்தவர் சிக்கினார்

ஓடும் ரயிலில் செயின் பறித்தவர் சிக்கினார்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பிரித்வி நகர் பகுதியில் வசிப்பவர் ஆரோக்யமேரி, 50. பெரியபுலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர். நேற்று காலை, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி புறநகர் மின்சார ரயிலில் பயணித்தார். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், உடன் பயணித்த வாலிபர் ஒருவர், ஆரோக்யமேரி அணிந்திருந்த, மூன்றரை சவரன் செயினை அறுத்து கொண்டு ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தார். அந்த ரயில் நிலையத்தில் ஏறிய பெண் ஒருவர், நடைமேடையில் நின்ற அவரது மகனிடம் தெரிவித்தார். அவரது மகன், அந்த நபரை விரட்டி சென்று பிடித்தார். பிடிபட்ட நபர் பொன்னேரியை சேர்ந்த கவுதம், 23, என்பது தெரிந்தது. அங்கிருந்தவர்கள், அவரை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை