உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் கூடுதலாக ஓட்டு சாவடிகள்...அதிகரிப்பு!:1,500 வாக்காளருக்கு மேல் இரண்டாக பிரிப்பு

திருவள்ளூரில் கூடுதலாக ஓட்டு சாவடிகள்...அதிகரிப்பு!:1,500 வாக்காளருக்கு மேல் இரண்டாக பிரிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள இடங்களில், ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 10 சட்டசபை தொகுதிகளிலும், கூடுதலாக, 22 துணை ஓட்டுச் சாவடிகள் அதிகரித்து தற்போது 3,687 ஓட்டு சாவடிகள் உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாவட்டம் முழுதும், 290 பள்ளிகளில், 3 ஆயிரத்து 665 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச் சாவடிகளைப் பிரித்து, துணை ஓட்டுச் சாவடிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும், கூடுதலாக, 22 துணை ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ஓட்டுச் சாவடி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும், கூடுதலாக 22 துணை ஓட்டுச் சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், 88 ஓட்டுச் சாவடி இடங்கள், வாக்காளர் வசதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 26 ஓட்டுச் சாவடி கட்டடங்களும் மாற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 'செல்பி பாயிண்ட்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்து, புகைப்படும் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல், சத்தியபிரசாத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடந்த ஜன.,22ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் விபரம்:

தொகுதி ஓட்டுச்சாவடி வாக்காளர்கள் ஆண் பெண் திருநங்கை மொத்தம்கும்மிப்பூண்டி 1,32,777 1,39,802 43 2,72,622பொன்னேரி(தனி) 1,25,362 1,31,296 29 2,56,687திருத்தணி 1,34,160 1,38,174 28 2,72,362திருவள்ளூர் 1,27,343 1,33,723 28 2,61,094பூந்தமல்லி (தனி) 1,80,252 1,87,626 69 3,67,947ஆவடி 2,16,640 2,22,079 94 4,38,813மதுரவாயல் 2,12,454 2,12,090 117 4,22,861அம்பத்துார் 1,77,720 1,78,503 80- 3,56,303மாதவரம் 2,28,594 2,32,229 112 4,60,935திருவொற்றியூர் 1,34,977 1,38,980 129 2,74,086மொத்தம் 16,70, 279 17,12,702 729 33,83,710

தலைவர்கள் படம் அகற்றம்

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது.

இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் வைக்கப்பட்டிருந்த, அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறையின், விளம்பர வாகனத்தில் இருந்த கட்சி தலைவர்கள் படம், பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டது.மேலும், திருவள்ளூர் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் வரையப்பட்ட அரசியல் கட்சியினர் விளம்பரங்கள், சுவரொட்டிகளை அழிக்கும் பணியில் நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் துவங்கி உள்ளனர். தேர்தல் முடியும் வரை, அரசு மற்றும் தனியார் சுவர்களில் அனுமதியின்றி விளம்பரங்கள் வரையப்பட்டால், அரசியல் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், அதை அழிக்கும் செலவையும் அக்கட்சியினரே வழங்க வேண்டும், என நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்ததையடுத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு திருத்தணி தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ.,ராக்கிகுமாரி ஆகியோர் திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வந்து அலுவலக கதவுக்கும் மற்றும் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டிற்கும் 'சீல்' வைத்தனர்.

எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பூட்டு

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்ததையடுத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு திருத்தணி தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ.,ராக்கிகுமாரி ஆகியோர் திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வந்து அலுவலக கதவுக்கும் மற்றும் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டிற்கும் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை