உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாய தொழிலாளர்கள் திருத்தணியில் ஊர்வலம்

விவசாய தொழிலாளர்கள் திருத்தணியில் ஊர்வலம்

திருத்தணி:மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து நேற்று திருத்தணி--- பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் இருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் டிராக்டர், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் திருத்தணி நகர் முழுதும் ஊர்வலமாக வந்தனர்.மாவட்ட துணைத் தலைவர் அப்சல் அகமது தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு தலைவர் பெருமாள், மாவட்ட செயலர் தமிழரசு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் பாபு, ஜெயச்சந்திரன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.விவசாயிகள் விளைவிக்கும் பொருளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்ந்து விலை அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை