உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டு பேர் மீது வழக்கு

பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டு பேர் மீது வழக்கு

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சி தீன் நகரை சேர்ந்தவர்கள் ஜாப்பர், 26, மற்றும் மொய்தீன், 22, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள உறவினருக்கு பிறந்தநாள் என்பதால் வெடி வைத்து கொண்டாடி உள்ளனர்.அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் மஸ்தானி, 'ஏன் இப்படி இரவில் வெடி வைத்து கூச்சலிடுகிறீர்கள்' எனக் கேட்டுள்ளார். இதற்கு, மொய்தீன் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து மஸ்தானி அளித்த புகாரின்படி, மொய்தீன் மற்றும் ஜாப்பர் மீது வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை