| ADDED : ஜன 26, 2024 08:57 PM
திருமழிசை:திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு தையில் மகோற்வசம் அவதார திருவிழா கடந்த 5ம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது.பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.நேற்று தையில் மகோற்சவ அவதார திருவிழாவை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு, நாச்சியார் திருக்கோலத்தில் ஜெகந்நாத பெருமாள் ஏழூர் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து எண்ணெய் காப்பு திருமஞ்சமனமும், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, இன்று காலை 7:00 மணிக்கு நடைபெறுமென ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.