உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மயங்கி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

மயங்கி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது நயிம், 27. திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தார்.இவர், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை திருவள்ளூரில் உள்ள தன் சகோதரி கடைக்கு சென்றார். பின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை