| ADDED : ஜன 26, 2024 09:11 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் வசித்தவர் சுதாகர், 48. தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இம்மாதம், 24ம் தேதி மாலை, வேலை முடிந்து டூ-- வீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ஈகுவார்பாளையம் அருகே காட்டுப் பன்றி ஒன்று குறுக்கே வந்ததால், சாலையில் தடுமாறி விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் அனுமதியுடன், அவரது கல்லீரல், இதயம், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள், நேற்று தானமாக வழங்கப்பட்டது.உடல் உறுப்புகள் தானமாக வழங்கி சுதாகரின் உடலுக்கு நேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பொன்னேரி சப்- -கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி ஆகியோர் சுதாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.