உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி மாணவி யோகாவில் சாதனை

அரசு பள்ளி மாணவி யோகாவில் சாதனை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கோபால்ரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முரளிகிருஷ்ணா - மீனா தம்பதியின் மகள் எம்.பூஜ்யாஸ்ரீ, 9. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.கும்மிடிப்பூண்டியில் உள்ள வினாஸ்ரீ யோகா மையத்தில் பயிற்சி பெற்று வரும் நிலையில், திவி பாத சிராசாசனத்தில் நின்றபடி, இரண்டு நிமிடத்தில், 200 முறை கால் முட்டிகளை இணைத்து உலக சாதனை படைத்தார்.இவரத சாதனை, நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவிக்கு உலக சாதனைக்கான சான்று மற்றும் பதக்கத்தை கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை