உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலையோரம் இறைச்சி கழிவுகள்

இணைப்பு சாலையோரம் இறைச்சி கழிவுகள்

சோழவரம்:சென்னை- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் உள்ள இணைப்பு சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.இதில், அதிகப்படியான ஆடு, கோழிகளின் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது.அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். இணைப்பு சாலையோரம் உள்ள கால்வாய்களில் கழிவுகள் கொட்டப்படுவதால், மழைநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.இறைச்சி கழிவுகளை உண்பதற்காக வரும் நாய், பன்றி உள்ளிட்டவை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழலும் உள்ளது.மேற்கண்ட இணைப்பு சாலையோரம் உள்ள இறைச்சி கழிவுகளை அகற்றி துாய்மையாக வைத்திருக்கவும், சுகாதாரமாக அப்புறப்படுத்தால், அலட்சியமாக சாலையோரங்களில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை