மேலும் செய்திகள்
கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
5 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவிப்பு
5 hour(s) ago
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த சிட்ரபாக்கம் பகுதி, ஆரணி ஆற்றின் கரையில் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, வெள்ள நீர் சிட்ரபாக்கம், கலைஞர் நகர், கொய்யாத்தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மழைநீர் வடியும் வரை அவதிப்படுகின்றனர்.இதை தடுக்க நபார்டு திட்டத்தின் மூலம் ஆரணி ஆற்றின் கரையில், சிட்ரபாக்கம் பகுதியில் ஒரு கி.மீட்டர் துாரத்திற்கு கரை அமைத்து, சாலை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்க, 3.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. கடந்தாண்டு, ஏப்., மாதம் துவங்கிய பணியை செப்., மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.துவக்கத்தில் ஜரூராக இருந்த பணிகள், தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கரைகள் அமைக்கும் பணிகள் முடிந்து, தற்போது சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. சாலை விரிவாக்கத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் பணி நடக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணியில், மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடந்து வருகிறது.இதுகுறித்து ஊத்துக்கோட்டை பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:3.13 கோடி ரூபாயில் திட்டம் துவங்கிய உடன் கடந்தாண்டு அக்., மாதம் ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்க தீர்மானம் நிறைவேற்ற மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை எவ்வித பணிகளையும் செய்யாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களை உடனடியாக மாற்றி அமைத்து, சாலைப் பணியை துவக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago