உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாபளூர் கிராமத்தில் தார்ச்சாலை சீரமைப்பு

நாபளூர் கிராமத்தில் தார்ச்சாலை சீரமைப்பு

திருத்தணி: சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் கிராமத்திற்கு செல்லும் தார்ச் சாலை குண்டும், குழியுமாக மாறியிருந்தது. இதனால் நாபளூர் கிராமம் மற்றும் காலனி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இதுதவிர, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவதிப்பட்டனர். அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாக த்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஒன்றிய நிர்வாகம், 88 லட்சம் ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நாபளூர் செல்லும் ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு புதியதாக தார்ச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு வாரமாக போடப்பட்டு வந்த தார்ச்சாலை பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை