உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ் பாஸ் இல்லாத மாணவியர் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டனர்

பஸ் பாஸ் இல்லாத மாணவியர் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டனர்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம், கன்னிகைப்பேர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் கல்லுாரி படிப்பிற்காக பொன்னேரியில் உள்ள லோகநாத நாராயணசாமி கல்லுாரிக்கு செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பயிலும், மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக செல்லலாம் என அறிவித்து உள்ளது. இதற்காக தனியாக பாஸ் எதுவும் வழங்கவில்லை.பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களின் சீருடைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகியவற்றை பஸ் ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரிடம் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலை, பொன்னேரி கல்லுாரியில் இருந்து பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள மாணவ, மாணவியர் வீட்டிற்கு செல்ல அங்கிருந்து பஸ் மூலம் ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலைக்கு வந்துள்ளனர்.பின் அவ்வழியே வந்த தடம் எண்.514 மாநகர பஸ்சில் ஏறினர். பஸ் தானாகுளம் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, நடத்துனர் கல்லுாரி மாணவியரிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். கல்லுாரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தும் அதை ஏற்காத நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். இதனால் டிக்கெட் எடுக்காத கல்லுாரி மாணவியரை தாணாகுளம் பகுதியில் இறக்கி விட்டு சென்றார். இதனால் அவ்வழியில் வந்த மற்றொரு பஸ்சில் ஏறி மாணவியர் பெரியபாளையம் சென்றனர். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அரசு மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்களில் அரசு கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது கல்லுாரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம். மாணவர்களிடம் டிக்கெட் வாங்குமாறு வற்புறுத்தினால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.- பெயர் வெளியிட விரும்பாத எம்.டி.சி., அதிகாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை