உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சூப்பர் டிவிஷன் ஹாக்கி வருமான வரி அணி வெற்றி

சூப்பர் டிவிஷன் ஹாக்கி வருமான வரி அணி வெற்றி

சென்னை: சூப்பர் டிவிஷன் ஹாக்கியில் நேற்றைய போட்டியில், வருமான வரி அணி வெற்றி பெற்றது.சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் பைனான்ஸ் 59வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.தமிழக போலீஸ் உட்பட மொத்தம், 14 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், இந்தியன் வங்கி மற்றும் ஐ.ஓ.பி., வங்கி அணிகள் மோதின. அதில் 1 - 1 என்ற கணக்கில் ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.நேற்று மதியம் 2:00 மணிக்கு நடந்த ஆட்டத்தில், வருமான வரித்துறை மற்றும் அக்கவுன்ட் ஜெனரல் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் வருமான வரி அணி, 3 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.வருமான வரி அணியின் வீரர் கார்த்திக், அதிரடியாக விளையாடி மூன்று கோல்களை அடித்து, வெற்றிக்கு கைகொடுத்தார். எதிர் அணிக்கு தாமு மற்றும் பாரி தலா ஒரு கோல் அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை