உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் பயணியருக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்

ரயில் பயணியருக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்

பொன்னேரி:பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, புறநகர் ரயில்களில் சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட பயணியர் சென்று வருகின்றனர்.ரயில் நிலையத்திற்கு பயணியர் வந்து செல்லும் போது, அங்குள்ள நுழைவாயில் பகுதியை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.அதையும் மீறி, ரயில் நிலையத்திற்கு பயணியரை விடுவதற்காக வருவோர், இருசக்கர வாகனங்களை நுழைவாயிலில் நிறுத்தி விடுகின்றனர்.இவ்வாறு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால், பயணியருக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களின் இடையே புகுந்து பயணியர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால், காலை நேரங்களில் அவசரமாக ரயிலை பிடிக்க செல்வோர், பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதே பகுதியில் வாகன நிறுத்துமிடம் இருந்தும், அதை பயன்படுத்தாமல், மற்ற பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.எனவே, நுழைவாயில் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை