உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வள்ளலார் அன்பர்கள் நித்திய கைங்கர்யம்

வள்ளலார் அன்பர்கள் நித்திய கைங்கர்யம்

ஆர்.கே.பேட்டை: அம்மையார்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கலையரங்கில், வள்ளலார் பக்தர்கள் சார்பில் தினசரி கஞ்சி அன்னதானம் வார்க்கப்பட்டு வருகிறது.ஜீவகாருண்யம் வழி நடக்கும் வள்ளலாரின் அனபர்கள் சார்பில், பவுர்ணமி ஜோதி வழிபாடு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பவுர்ணமியில் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கலையரங்கில், நித்திய கைங்கர்யமாக, தினசரி கஞ்சி அன்னதானம் வார்க்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில், வள்ளலாரின் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். தினசரி காலை 11:00 மணியளவில், சுடச்சுட அரிசி கஞ்சி வழங்கப்படுகிறது. சிறுவர்கள் முதல் முதியோர் வரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை