உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கிராம குழந்தைகளுக்கு தடுப்பூசி : அரசு உத்தரவு

கிராம குழந்தைகளுக்கு தடுப்பூசி : அரசு உத்தரவு

புதூர் : கிராமங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில், திருவள்ளூர் பகுதியில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் பலியாகின. அதன்பின், டாக்டர்கள் கண்காணிப்புடன் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட, அப்போதையை அரசு உத்தரவிட்டது. இதனால், கிராமங்களுக்கு செவிலியர்கள் செல்வதும், கர்ப்பிணிகளை கண்காணிப்பதும் குறைந்தது. இதன் காரணமாக, குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்தது தெரிய வரவே, தற்போதைய அரசு கிராமங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. கிராம செவிலியர்களும் கிராமங்களுக்கு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசிகள், போலியோ சொட்டு மருந்துகள் வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை