உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில்களில் ஆனி திருமஞ்சன பூஜை

கோவில்களில் ஆனி திருமஞ்சன பூஜை

உடுமலை : உடுமலை தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது.உடுமலை தில்லை நகரில் புகழ் பெற்ற ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நேற்று சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. இதையொட்டி ஆராதனை, வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து சிவகாமியம்மன் உடனமர் நடராஜர் சுவாமிகளுக்கும், மாணிக்கவாசகர் சுவாமிக்கும் பன்னீர், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்களில் திருமஞ்சனம் நடந்தது.சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. உடுமலை தில்லை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் பங்கேற்று திருமஞ்சனத்தை கண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை