உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை மரத்துக்கு போரான் சத்து தேவை

தென்னை மரத்துக்கு போரான் சத்து தேவை

உடுமலை:தென்னை மரங்களில், நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை தவிர்க்கும் முறைகள் குறித்து, வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலை., யில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், மடத்துக்குளத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இம்மாணவர்கள், மடத்துக்குளம் பகுதியில், தென்னை சாகுபடி குறித்து ஆய்வு செய்தனர்.மாணவர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 4.61 லட்சம் ெஹக்டேர் பரப்பில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், தேங்காய் விளைச்சல் பாதித்துள்ளது. இதற்கு மாற்றாக, மரங்களுக்கு தேவையான போரான் நுண்ணுாட்ட சத்து வழங்குவதால், பூத்தலும், மகரந்த சேர்க்கையை பெருக்குவதால், தேங்காய் விளைச்சலும் கூடுதலாகும்.நுண்ணுாட்ட சத்து குறைபாடு காரணமாக, தண்டு குறைந்த எண்ணிக்கையிலான இலைகளுடன், அதன் நுனியை நோக்கி தட்டுகிறது. இலைகள் வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.இவ்வாறு, கூறினர்.மேலும், தென்னை மரங்களுக்கு டேராசொல் போரான் மருந்து மரத்துக்கு, 25 கிராம் அளவில், வட்ட பாசன பாத்தியில் வழங்கும் முறை குறித்து விளக்கமளித்தனர். தென்னை மரங்களுக்கு, வேளாண் பல்கலை.,யின் கோகோ டானிக் வழங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்