உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அடகு நகையை விற்பதாக கூறி ரூ. 26 லட்சம் சுருட்டியவர் கைது

 அடகு நகையை விற்பதாக கூறி ரூ. 26 லட்சம் சுருட்டியவர் கைது

திருப்பூர் : அடகு நகையை விற்பதாக கூறி, 26 லட்சம் ரூபாயை சுருட்டியவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், என்.ஆர்.கே., புரத்தை சேர்ந்த விஜயகுமார், 49; நகை கடை வைத்துள்ளார். கடந்த மே மாதம், பல்லடத்தை சேர்ந்த நகை தொழிலாளி பொன் ஐயப்பன், 44 என்பவர் அறிமுகமானார். தனது 500 கிராம் தங்க நகை வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும். அதனை மீட்டு, விற்பனை செய்து விடுவதாகவும் பொன் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.நகை அடமானத்தில் இருப்பதை உறுதி செய்த விஜயகுமார், அதை மீட்க, 26 லட்சம் ரூபாயை பொன் ஐயப்பன் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். பண பரிமாற்றம் நடைபெற்ற உடனேயே, பொன் ஐயப்பன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார், பொன் ஐயப்பனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ