உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெயிலில் பக்தர்கள் தவிப்பு

வெயிலில் பக்தர்கள் தவிப்பு

பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது.கோவில் குண்டம் தேர்த்திருவிழா நாளை நடக்கிறது. கோவிலில் கடந்த 20ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக தினசரி கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. தடுப்புக்கு மேல் முழுமையாக பந்தல் அமைக்கப்படவில்லை. பந்தல் விடுபட்டுள்ள இடங்களில் பக்தர்கள் வெயிலில் நின்று அம்மனை தரிசிக்க செல்ல வேண்டி உள்ளது. வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். விடுபட்ட இடங்களிலும் பந்தல் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை