உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏமாற்றங்கள் - 3 : மதுக்கடை திறக்க முனைப்பு

ஏமாற்றங்கள் - 3 : மதுக்கடை திறக்க முனைப்பு

தாராபுரம், சூரியநல்லுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து, டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மக்கள் கூறியதாவது:சூரியநல்லுாரில் இடையன்கிணறு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்த 50 மீட்டர் தொலைவில், டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்காக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும்; நெடுஞ்சாலை அருகே அமைப்பதால், விபத்து எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால், மக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை