உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலைவாழ் மக்கள் குடியிருப்பில் போதை விழிப்புணர்வு முகாம்

மலைவாழ் மக்கள் குடியிருப்பில் போதை விழிப்புணர்வு முகாம்

உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பகம், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட, காட்டுப்பட்டி, மாவடப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், தாராபுரம் மது விலக்கு பிரிவு போலீஸ் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.இன்பெக்டர் சாந்தி தலைமை வகித்தார். எஸ்.ஐ.,கள் கிருஷ்ணகுமார், துரைமணி, போலீசார் கோவிந்தன், பாலகிருஷ்ணன், சிவக்குமார் மற்றும் மலைவாழ் மக்கள் பங்கேற்றனர். முகாமில், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ,மலைவாழ் மக்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை