உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டில் இருந்தே முதியவர்கள் ஓட்டுப்பதிவு; ஏற்பாடு தீவிரம்

வீட்டில் இருந்தே முதியவர்கள் ஓட்டுப்பதிவு; ஏற்பாடு தீவிரம்

திருப்பூர்:மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தவறாமல் தபால் ஓட்டு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகள், வீட்டிலிருந்தபடியே ஓட்டளிப்பதற்கான வசதியை தேர்தல் கமிஷன் ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மூத்த வாக்காளர் 30,822 பேர்; மாற்றுத்திறனாளிகள் 12,760 பேர் உள்ளனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக சென்று, மாற்றுத்திறனாளி, மூத்த வாக்காளர்களிடம், தபால் ஓட்டுக்கு விருப்பம் கோரும், படிவம் 12டி பூர்த்தி செய்து பெற்றுவருகின்றனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ், நேற்று, குமரானந்தபுரத்தில் உள்ள ஒரு மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றார். மூதாட்டியிடம், 'முந்தைய தேர்தலில், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தீர்களா' என்றார். 'இல்லை' என மூதாட்டி பதிலளித்தார். கலெக்டர், 'இந்த தேர்தலில், உங்களைப்போன்ற மூத்த குடிமக்கள், வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது' என்றபடி, தபால் ஓட்டுக்கு விருப்பம் கோரும் படிவம் '12டி'ஐ மூதாட்டியிடம் வழங்கினார்.தபால் ஓட்டுக்கு விருப்பம் தெரிவிப்போரின் வீட்டுக்கு, இரண்டு ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஒரு போட்டோ கிராபர் மற்றும் போலீஸ் அடங்கிய ஓட் டுப்பதிவு குழு செல்லும். வாக்காளர், வீட்டிலிருந்த படியே தபால் ஓட்டு பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை