உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பன்னாட்டு நிறுவனத்துடன் அரசு கல்லுாரி ஒப்பந்தம்

பன்னாட்டு நிறுவனத்துடன் அரசு கல்லுாரி ஒப்பந்தம்

உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லூரியின் வேதியியல் துறையும், கிணத்துக்கடவு 'ஜேக்கபி கார்பன்ஸ்' என்ற பன்னாட்டு நிறுவனமும், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லுாரியில் நடந்தது.''இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக பன்னாட்டு நிறுவனத்தின் வழி தொழில்சார் கருத்தரங்கம் நடத்தி கல்லூரி மாணவர்கள் பயன்பெறலாம்.தொழில் நிறுவனங்களைப் பார்வையிடவும், மாணவர்கள் தொழில்சார் பயிற்சிகளை மேற்கொண்டு வேலை வாய்ப்பு வசதிகளைப் பெறவும், புராஜக்ட் செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது,'' என கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.நிகழ்ச்சியில், வேதியியல் துறைத்தலைவர் சிவக்குமார், பேராசிரியர்கள் திருமாவளவன், திருமூர்த்தி, துறைப்பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை