உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓட்டுச் சாவடிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

ஓட்டுச் சாவடிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூர்;லோக்சபா தேர்தலுக்கான பணிகள் பல்வேறு தரப்பிலும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டசபை தொகுதிவாரியான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓட்டுச் சாவடி அலுவலர்கள் பணி நியமனம், பயிற்சி வகுப்புகள், ஓட்டுச் சாவடிகள் தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வகையில், திருப்பூர் லோக்சபா தொகுதியில் அடங்கிய திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடி மையங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஓட்டுச் சாவடி மையங்களில் ஆய்வு செய்தார்.தென்னம்பாளையம், பட்டுக்கோட்டையார் நகர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் ஓட்டுச்சாவடி அமையும் இடங்களைப் பார்வையிட்டு, வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், உதவி கமிஷனர்கள் வினோத், தங்கவேல்ராஜன், தேர்தல் துணை தாசில்தார் வசந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை