உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நம் குடியிருப்பு; நம் பொறுப்பு : குடியிருப்போர் நலச்சங்கங்கள் தீவிரம்

நம் குடியிருப்பு; நம் பொறுப்பு : குடியிருப்போர் நலச்சங்கங்கள் தீவிரம்

திருப்பூர் : திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அங்கு, 1,248 வீடுகள் உள்ளன. 'நம் குடியிருப்பு; நம் பொறுப்பு' என்ற அரசின் வழிகாட்டுதல் படி, குடியிருப்புக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்கும் பணிகள், குடியிருப்போர் நலச்சங்கம் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.நிர்வாக வசதிக்காக இங்கு, 3 குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பிளாக் எண் 15 முதல், 19 வரையிலான குடியிருப்புகளை உள்ளடக்கி செயல்படும் திருக்குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தங்கள் பராமரிப்பில் உள்ள குடியிருப்பு பகுதியில், 16 'சிசிடிவி' கேமராக்களை சமீபத்தில் பொருத்தினர்.குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராம்குமார் கூறியதாவது: குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு ஒரு குடும்பத்துக்கு, மாதம், 250 ரூபாய் மட்டுமே சந்தா வசூலிக்கப்படுகிறது. 'போர்வெல்' வாயிலாக, தடையின்றி நீர் வினியோகிக்கிறோம். வெளிப்புறத்தை சுத்தம் செய்ய, துாய்மைப் பணியாளரை நியமித்துள்ளோம். முதியோர் வசதிக்காக தேவையான இடங்களில் படிக்கட்டு அமைத்துள்ளோம்.குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரை, நாங்கள் அமைத்துள்ள தோட்டத்துக்கு நீர் பாய்ச்சி, செடி வளர்க்கிறோம். சுற்றுப்புறத்தில் களைச்செடிகளை அகற்றுகிறோம். வரும் நாட்களில் இருள் சூழும் இடங்களில் சோலார் மின் விளக்கு பொருத்தவும்திட்டமிட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை