உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி ஆபீசில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுது

நகராட்சி ஆபீசில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுது

அவிநாசி;திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதை சீரமைக்க நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் முன் அறையில் பொதுமக்கள் பயன்படுத்த வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் நகராட்சி அலுவலகத்துக்கு, பல்வேறு பணிகளுக்காக தொலைவில் இருந்து வரும் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் வெளியில் உள்ள பேக்கரியில் காசு கொடுத்து வாங்கி தாகம் தணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுது ஏற்பட்டுள்ளதை பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை