உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறக்கும் படையால் ரூ.2.02 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையால் ரூ.2.02 லட்சம் பறிமுதல்

திருப்பூர்;திருப்பூர், காங்கயத்தில் தேர்தல் பறக்கும் படையால், ரூ.2.02 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட ஈட்டி வீரம்பாளையம், மொய்யாண்டம்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆறுமுகம் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். குன்னத்துாரை சேர்ந்த முருகன், 49 என்பவரிடமிருந்து, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட, காங்கயம், நத்தக்காடையூர் ரோட்டில் ஈரோடு பில்டர்ஸ் கல்லுாரி அருகே பறக்கும்படை அதிகாரி ஆனந்தகுமார் தலைமையிலான குழு வாகன தணிக்கை செய்தனர். செல்லதுரை என்பவரிடமிருந்து, 52 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்