உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறக்கும் படையிடம் சிக்கியது ரூ.5.80 லட்சம்

பறக்கும் படையிடம் சிக்கியது ரூ.5.80 லட்சம்

திருப்பூர்;திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாவிபாளையம் சந்திப்பில், பறக்கும்படை அதிகாரி கவுரிசங்கர் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். முறையான ஆவணங் களின்றி சரவணன் என்பவர் கொண்டுசென்ற 61 ஆயிரத்து 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது.கர்ணன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர், திருப்பூர், கொங்குமெயின் ரோடு, சின்னசாமி அம்மாள் பள்ளி அருகே, வாகன சோதனை நடத்தினர். சாமிநாதன் என்பவரிடமிருந்து, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் நேற்று நடத்திய ஆய்வில், மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தொகையை, திருப்பூர் வடக்கு சட்டசபை கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரன், சார்நிலை கருவூலத்தில் சேர்த்தார்.

பல்லடம்

பல்லடம் அடுத்த, கரடிவாவி செக்போஸ்ட் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரை நிறுத்தி சோதனை செய்த போது, 3.40 லட்சம் ரூபாய் இருந்தது.அதிகாரிகள் கூறுகையில், 'காரில், 3.40 லட்சம் ரூபாய் வைத்திருந்தனர். இதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. உரிமையாளர் கார்த்திக் என்பவரிடம் கேட்டதற்கு, நாமக்கல் செல்வதாகவும், இரண்டு மாதத்துக்கு முன், நிலம் விற்பனை செய்த தொகையை எடுத்துச் செல்வதாகவும் கூறினார். போதிய ஆவணங்கள் இன்றி, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததன் காரணமாக, தொகை பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ