உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் பாதுகாவலர்களுக்கு சைமா நிர்வாகிகள் புகழாரம்

தொழில் பாதுகாவலர்களுக்கு சைமா நிர்வாகிகள் புகழாரம்

திருப்பூர்;திருப்பூர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அலுவலகத்தில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. தலைவர் ஈஸ்வரன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற, திருப்பூர் தியாகிகள், பின்னலாடைத் தொழிலுக்கு பாதுகாவலராக இருந்த முன்னாள் நிர்வாகிகள் குறித்தும் அவர்களது பணிகள் குறித்தும் நினைவு கூரப்பட்டது. பனியன் தொழிலில் கடந்தகால வரலாறு குறித்தும், தொழிலின் எதிர்காலம் குறித்தும், சங்க நிர்வாகிகள் பேசினர். --3 காலம் படம்'சைமா' அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி