| ADDED : மார் 28, 2024 10:38 PM
உடுமலை:சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் குறித்த போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவர்களுக்கு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.ஆண்டுதோறும், ஐ.ஏ.ஏ.சி., எனப்படும் சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டி நடத்தப்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதியில், இப்போட்டிகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்து, மாணவர்களை பங்கேற்கச்செய்கிறார்.ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:நடப்பாண்டு ஐ.ஏ.ஏ.சி., அமைப்பின் சார்பில், வானியல் மற்றும் வான் இயற்பியல் குறித்த இணையவழி போட்டி நடக்க உள்ளது. வானியல் அறிவு மற்றும் படைப்பாற்றல் திறனில் ஆர்வமாக இருப்போர், இப்போட்டியில் பங்கேற்கலாம்.இணையவழியில், வானியல் மற்றும் வான் இயற்பியல் தொடர்பான வினாக்களுக்கான விடைகளை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். முதல் நிலையில் வெற்றி பெறுவோர், இரண்டாம் நிலைக்கு தகுதி பெறுகின்றனர்.ஒவ்வொரு நிலையிலும் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, சர்வதேச அளவிலான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்போட்டி குறித்து கூடுதல் தகவல்களுக்கு, 99424 67764 என்ற எண்ணில் அணுகலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.