உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொளுத்தி தள்ளுகிறது வெயில் :ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு

கொளுத்தி தள்ளுகிறது வெயில் :ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு

திருப்பூர்:'வெயிலின் தாக்கத்தால் நடப்பாண்டு ஏ.சி., விற்பனை, ஏர்கூலர் விற்பனை அதிகரிக்கும்,' என, விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலை, 100 முதல், 103 பரான்ஹீட்டாக பதிவாகிறது. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மதிய நேரத்தில் வெளியே தலைகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏ.சி., ஏர்கூலர் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.திருப்பூரை சேர்ந்த ஏ.சி., விற்பனையாளர் விஜய் கூறியதாவது:கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு ஏ.சி., விற்பனை மெல்ல உயர்ந்து வருகிறது. 10 முதல், 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏர்கூலர் வாங்க வருவோர், 40 ஆயிரம் செலுத்தி குறைந்தபட்ச அளவிலான (ஒரு டன்) ஏ.சி., வாங்கி, தவணை செலுத்தி செலுத்துகின்றனர்.வீட்டில், மின் விசிறி இருந்தாலும், கூட, 10 ஆயிரம் ரூபாய் விலையில், ஏர்கூலர் வாங்கி விடுகின்றனர். ஏ.சி.,யை விட, ஏர்கூலர் விற்பனை அதிகமாக உள்ளது. இதனால், வழக்கத்தை விட கூடுதலாக ஏர்கூலர்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி