திருப்பூர்:திருப்பூரில் பல இடங்களில் நடந்த வாகன தணிக்கையில், ரூ.4.87 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.லோக்சபா தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் போன்றவை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் தெற்கு தொகுதிக்குள் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், திருப்பூர் ராக்கியாபாளையம் - கணபதிபாளையம் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக காரில் வந்த முத்தணம்பாளையத்தை சேர்ந்த சரவணன், 35 என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.n திருப்பூர், தாராபுரம் ரோடு, கருப்பராயன் கோவில் அருகே, மணிவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவ்வழியாக காரில் வந்த அவிநாசியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சத்து, 99 ஆயிரத்து, 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.n திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில், பக்ருதீன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக காரில் வந்த, முருகம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.n ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளகோவில், மயில்ரங்கத்தில் சதீஷ்குமார் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய ஆவணங்களின்றி, 88 ஆயிரத்து, 100 ரூபாய் இருந்தது. சேலம், தாரமங்கலத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள், மூலனுார், கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடு வாங்க கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. ஐயப்பன் என்பவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.