உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் உருவாகிறது சங்க இலக்கிய பூங்கா

திருப்பூரில் உருவாகிறது சங்க இலக்கிய பூங்கா

திருப்பூர்:சங்ககால இலக்கிய நுால்களில் உள்ள, 150 தாவரங்களை அடையாளம் கண்டு, அவற்றை நாற்றுக்களாக உருவாக்கி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில், சங்க இலக்கிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அகநானுாறு, தொல்காப்பியம், பட்டிணப்பாலை, புறநானுாறு, திருக்குறள் உட்பட, 50 வகையான சங்க இலக்கிய நுால்களில், ஒவ்வொரு பாடல்கள் வாயிலாக, 150 வகையான செடி, கொடி, மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் நாற்றுக்களை உருவாக்கி, திருப்பூரில், சங்க இலக்கிய பூங்காவை உருவாக்க, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.இதற்காக, மாநகராட்சி மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு சார்பில், சந்திராபுரம் பூங்காவில், இன்று மரக்கன்று நடும் விழா நடக்கிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மற்றும் மேயர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைக்க உள்ளனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை