உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமத்தில் பறவைகள்; கணக்கிட்ட மாணவர்கள்

கிராமத்தில் பறவைகள்; கணக்கிட்ட மாணவர்கள்

திருப்பூர்;திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- - 2 சார்பில், கருமாபாளையத்தில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.முகாமில் கிராமத்தில் உள்ள பறவைகள் நோக்கல் மற்றும் கணக்கீடு நிகழ்வு நேற்று நடந்தது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, திருப்பூர், இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் பங்கேற்று, பறவைகள் இருப்பதால் தான் நாம் உயிர் வாழ்கிறோம். வனம், பறவைகள், அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தார்.கொண்டலாத்தி, பட்டை கழுத்து புறா, புதர் குருவி, பனை உளவாளி, கருப்பு வெள்ளை வாலாட்டி போன்ற, 33 வகையான பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டது. மெஜஸ்டிக் நிறுவன தலைவர் கந்தசாமி, கல்லுாரி பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், சக்தி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி