உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இருதய மருத்துவ முகாம்

இருதய மருத்துவ முகாம்

திருப்பூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரேவதி மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து இருதய பரிசோதனை முகாமை நடத்தி வருகிறது.நேற்று துவங்கிய இம்முகாம் நாளை (28ம் தேதி) வரை நடக்கிறது. இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் நாகராஜ் முகாமில் பரிசோதனை மேற்கொள்கிறார். 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும்.ரேவதி மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் இருதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த சிகிச்சை முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். விவரங்களுக்கு 98422 09999 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை