உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பயிர் விளைச்சல் போட்டி; பரிசு பெற அழைப்பு

 பயிர் விளைச்சல் போட்டி; பரிசு பெற அழைப்பு

திருப்பூர்: 'மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், விவசாயிகள் பங்கேற்று பரிசுத்தொகை பெறலாம்' என வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு அறிக்கை: மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மாநில அளவில் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தி பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு, முதல் பரிசு, 2.50 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 1.50 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இப்போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் கம்பு, பச்சைப்பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றம் கரும்பு ஆகிய பயிர்களில், மாநில அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று, குறைந்தபட்சம், 5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தகுதியுள்ளவர்கள் ஆவர். பயிர் விளைச்சல் போட்டியில், பங்கேற்கும் விவசாயிகள், உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவுக்கட்டணம், 150 ரூபாயுடன், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன், பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைபடம் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை