உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபாய கட்டத்தில் இருந்த வி.ஏ.ஓ., ஆபீஸ் இடிப்பு

அபாய கட்டத்தில் இருந்த வி.ஏ.ஓ., ஆபீஸ் இடிப்பு

பொங்கலுார்: திருப்பூர், காங்கயம் ரோடு, படியூரில் வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை மற்றும் சிலாப்புகள் உடைந்து அபாயகரமான கட்டத்தில் இருந்தது. பணி நிமித்தமாக அங்கு செல்லும் பொதுமக்களுக்கும், அங்கு பணி புரியும் அலுவலர்களுக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழ்நிலை இருந்தது.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த வருவாய் துறையினர் பாழடைந்த அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். தற்பொழுது வி.ஏ.ஓ., அலுவலகம் அதன் எதிரே உள்ள ஒரு கட்டடத்தில் செயல்படுகிறது. அபாயகரமான கட்டடம் இடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை