உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொங்கு நகரில் சூதாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கொங்கு நகரில் சூதாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, கொங்குநகர் முதல்வீதியில், இரவு, பகலாக சூதாட்டம் நடப்பது அதிகரித்துவிட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.கொங்கு மெயின் ரோடு முதல் வீதியில், ஏராளமான வீடுகள் உள்ளன; அப்பாச்சி நகர் ரோடு, கொங்குமெயின் ரோட்டை இணைக்கும், முதல் வீதி ரோட்டில், வெளியே இருந்து வருவோர் பணம் கட்டி சீட்டாடுவது அதிகரித்துள்ளது.பொழுதுபோக்காக, சீட்டு விளையாட துவங்கியது; இன்று, சூதாட்டமாக மாறியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மாலை நேரம் துவங்கி நள்ளிரவு வரையிலும், பணம் கட்டி சீட்டு விளையாடுகின்றனர்.சிலநேரம் பகலில் இருந்தே சீட்டு விளையாடுகின்றனர். பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு, கும்பலாக சேர்ந்து சீட்டு விளையாடுகின்றனர்.இதுகுறித்து கேட்டால், தரக்குறைவாக பேசுகின்றனர். போலீசார், இப்பகுதிக்கு ரோந்து வந்து, கொங்கு நகர் முதல் வீதியில், விதிமுறைகளை மீறி நடக்கும் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி