உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  29 வினாடியில் திருப்பூரை கடந்த அதிவேக ரயில்

 29 வினாடியில் திருப்பூரை கடந்த அதிவேக ரயில்

திருப்பூர்: தெற்கு ரயில்வேயின், 150 கி.மீ. அதிவேக சிறப்பு ரயில், 29 வினாடியில் திருப்பூரை கடந்தது. கோவை - சென்னை இடையே இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக, கடந்த, 15ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. கோவையில் இருந்து மதியம், 2:10 மணிக்கு புறப்பட்ட ரயில், 2:50 மணிக்கு திருப்பூரை கடந்தது. கடந்த, 15ம் தேதி இயக்கப்பட்ட ரயில், 32 நொடிகளை திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை கடந்த நிலையில், நேற்று, 29 வினாடிகளில் அதிவேக ரயில் கடந்துள்ளது. முன்னதாக நேற்று காலை, ஜோலார்பேட்டையில் புறப்பட்ட அதிவேக ரயில், 140 கி.மீ., வேகத்தில், திருப்பூரை கடந்து, காலை 11:37 மணிக்கு கோவை சென்றது. நேற்று ஒரே நாளில் இருமார்க்கத்திலும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை