திருப்பூர்: மொய்யாண்டாம்பாளையம், செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் கும்பாபிேஷக விழா நேற்று விமரிசையாக நடந்தது.திருப்பூர் அடுத்த ஈட்டி வீரம்பாளையம் கிராமம், மொய்யாண்டாம்பாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் மற்றும் கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சன்னதி உள்ளது.கோவிலின் கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு திருப்பணி, ஊர்ப்பொதுமக்கள் மற்றும் திருப்பணி கமிட்டி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி நிறைவடைந்து நேற்று கோவில்களின் கும்பாபிேஷகம் நடைெபற்றது.விழா துவக்கமாக, 16ம் தேதி கணபதி யாகம், லட்சுமி யாகம் உள்ளிட்டவை நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் 17ம் தேதி, வாஸ்து சாந்தி, அஷ்டதிக் தேவதைகள் வழிபாடு நடந்தது. அதன் பின் கடந்த 18ம் தேதி, பூமி பூஜை, முளைப்பாலிகை வழிபாடு ஆகியன நடந்தது.கடந்த 19ம் தேதி, தீர்த்தக் குடங்கள், முளைப்பாலிகை ஊர்வலம், காப்புக்கட்டு மற்றும் கும்ப அலங்காரம் நடந்தது. அன்று மாலை முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. 20ம் தேதி, காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், திரவியாகுதி, பூர்ணாகுதி, நிகழ்வுகளும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.நேற்று நிறைவு கால யாகசாலை பூஜை, அதிகாலை 4:00 மணிக்கு துவங்கியது. அதன்பின் தீர்த்தக்குடங்கள் புறப்பாடும், செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோபுர விமானங்களுக்கு புனித தீர்த்தங்கள் ஊற்றி கும்பாபிேஷகமும் நடந்தது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷக விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் தலைமையில் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.