உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாலிபால் வீரர்களை நினைவுகூர்ந்து உருக்கம்

வாலிபால் வீரர்களை நினைவுகூர்ந்து உருக்கம்

திருப்பூர்:திருப்பூரை சேர்ந்த சர்வதேச வாலிபால் வீரர் உட்பட, மறைந்த வாலிபால் வீரர்களுக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது.நேஷனல் வாலிபால் கிளப் நிறுவனர் காசிலிங்கம், முன்னாள் சர்வதேச வாலிபால் வீரர் மாரிசாமி, மாவட்ட வாலிபால் விளையாட்டின் தந்தை எனப்படும் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் சிவசுப்ரமணியம் ஆகிய மூவருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியை, முதல் தர வாலிபால் விளையாட்டு சாதனையாளர்கள் (1962 - 2011), முன்னாள் வாலிபால் வீரர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.மாரிசாமி குடும்பத்தினர், முன்னாள் மாநில, மாவட்ட வாலிபால் வீரர்கள் தங்கமணி, கந்தசாமி, நாகராஜன், ராமசாமி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் தாங்கள் விளையாடிய போட்டியின் இனிய அனுபவங்களை உரையாடினர். ஒரு நிமிட மவுன அஞ்சலி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது; 60 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை