| ADDED : ஜன 29, 2024 11:01 PM
உடுமலை:உடுமலை அடுத்த, பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.என்.வி., கல்விக் குழுமத்தின் தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஐ.ஜி., கோவிந்தராஜன் கலந்து கொண்டு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.இதேபோல, மாநில போட்டிகளில் வென்ற மாணவர்கள், கடந்தாண்டு, 10, பிளஸ் 1, பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் அன்னபூரணி, உடற்கல்வி ஆசிரியர் கணேசன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.