உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

கருத்து வேறுபாடு: பெண் தற்கொலைதிருப்பூரை அடுத்த ஊதியூரை சேர்ந்தவர் அருண்பிரகாஷ் - பனிமொழி தம்பதி. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதியருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த பனிமொழி, 31 வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஊதியூரில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில், சந்தேகப்படும் விதமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய ஆவணங்களின்றி, மூன்று யூனிட் சுண்ணாம்புக்கல் கொண்டு வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில், லாரியின் டிரைவர் சுந்தரம், 55 என்பவர் மீது ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமி கர்ப்பம்: ஆசாமி கைதுகாங்கயம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி; பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தாயுடன் சிறுமி வசிக்கிறார். தாயுடன், ஹரிபிரசாத், 35 என்பவர், கடந்த மூன்று மாதங்கள் முன், சேர்ந்து வாழத் துவங்கினார். இந்நிலையில், திடீரென சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, சிறுமி கர்ப்பம் என்பது தெரிந்தது. புகாரின் பேரில், ஹரிபிரசாத்தை 'போக்சோ' பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை