உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திறப்பு விழாவுக்கு தயாராகும் பொங்கலுார் போலீஸ் ஸ்டேஷன்

 திறப்பு விழாவுக்கு தயாராகும் பொங்கலுார் போலீஸ் ஸ்டேஷன்

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம் அவிநாசி பாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம் ஆகிய மூன்று போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால் குற்றச்சம்பவங்களும் அதிகரிக்கிறது. எனவே, பொங்கலுாருக்கு தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனால், பொங்கலுாரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதாக அரசு அறிவித்தது. போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் தேடும் பணியை போலீசார் துவக்கினர். தற்பொழுது பொங்கலுார் ஒன்றிய அலுவலகத்திற்கு, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. பொங்கலுார் பஸ் ஸ்டாப்பில் உள்ள பழைய ஒன்றிய அலுவலக கட்டடம் பயன்பாடு இன்றி கிடப்பதால் அதில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. பெயர் பலகை அமைப்பது, வர்ணம் தீட்டுவது, மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை தருவித்தல் உள்ளிட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. விரைவில் திறப்பு விழா காண உள்ளது. புதிதாக அமையவுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் ஸ்டேஷன் நிர்வாகத்தை கவனிப்பர். இதில் அவிநாசி பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பொங்கலுார், உகாயனுார், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட மாதப்பூர், காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட காட்டூர், வடமலை பாளையம், கள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் இணைய உள்ளன. விரைவில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நடைபெற உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை