உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு கிலோ மல்லிகை ரூ.240 விலை குறைவு: விற்பனை மந்தம்

ஒரு கிலோ மல்லிகை ரூ.240 விலை குறைவு: விற்பனை மந்தம்

திருப்பூர்:வரத்து அதிகரிப்பால், திருப்பூரில் பூக்கள் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ, 240 ரூபாய்க்கு விற்றது.பிப்., மாதத்தில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்தது. கிலோ, ஆயிரம் முதல், 1,500 ரூபாய்க்கு விற்றது. ஒரு முழம் பூ, 100 ரூபாய், 250 கிராம், 250 ரூபாய்க்கும் விற்றதால், மல்லிகை பூ வாங்கவே பெண்கள் தயங்கினர்.கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, பூ வரத்து மெல்ல அதிகரித்துள்ளது. 500 முதல், 900 கிலோ மல்லிகை வந்த பூ மார்க்கெட்டுக்கு, ஒன்று முதல், 1.40 டன் பூக்கள் வரத் துவங்கியுள்ளதால், பூ விலை குறைந்துள்ளது.நேற்று மல்லிகை, கிலோ, 200 முதல், 240 ரூபாய். முல்லை கிலோ, 150 ரூபாய், அரளி, 120, சம்பங்கி, 100, செவ்வந்தி, 180 ரூபாய்க்கு விற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பூ விலை குறைந்த போதும், வார விடுமுறை நாட்களில் விற்பனை சற்று மந்தமாக உள்ளதாக, பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை