உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

திருப்பூர்;காங்கயத்தில், உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு, அரசு மரியாதை வழங்கப்பட்டது.கடந்த 12ம் தேதி, காங்கயம், பழையகோட்டை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார். கடந்த, 12 ம் தேதி நடந்த விபத்தில், மூளைச்சாவு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. நேற்று அடக்கம் செய்யப்பட இருந்த நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், காங்கயம் தாசில்தார் மயில்சாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின், அரசு மரியாதை உடன், செல்வகுமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை