உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலைக்குழுவினர் ஆலோசனை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலைக்குழுவினர் ஆலோசனை

அவிநாசி:ஹிந்து அறநிலையத்தறை மூலம், கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளுதல், உழவாரப் பணிகள், கல்வெட்டுகள் ஆய்வு செய்தல் போன்றவைக்காக மாவட்ட நிலையான ஆலோசனை குழுவை சென்னை ஐகோர்ட் அமைத்தது.நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சென்னை ஐகோர்ட் நியமிக்கப்பட்ட மாவட்ட நிலை ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர். இக்குழு தலைவர் திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை, உறுப்பினர்கள் அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் சத்யா, தாசில்தார் (கோவில் நிலங்கள்) ரவீந்திரன், ஆலோசகர் தொல்லியல் துறை வல்லுனர் அர்ஜுனன், மண்டல ஸ்தபதி செந்தில் ஆனந்தன், உதவி ஸ்தபதி மாரிமுத்து ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.கோவில் செயல் அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன், கோவில் சரக ஆய்வாளர் செல்வப்பிரியா உட்பட பலர் உடன் இருந்தனர். அதன்பின், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் குட்டகம் மொக்கனீஸ்வரர் கோவில்களில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ